Header image alt text

sri lankan americaஅமெரிக்காவில் விதிக்கப்பட்ட பயண தடை காரணமாக அந்நாட்டு விமான நிலையங்களில் இலங்கையர்கள் பாதிப்புக்குள்ளாகி இருந்தால், அவர்கள் நியூயோர்கில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அறியத்தருமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கையர்கள் 001 917 597 7009 எனும் இலக்கத்தினூடாக நியூயோர்கில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவில் விதிக்கப்பட்ட பயண தடை காரணமாக இலங்கையர்களுக்கு அந்நாட்டு விமான நிலையங்களில் பாதிப்புக்கள் இல்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. Read more

kilinochchi studentsஎதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 23ம் திகதிவரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ரோல் போல் தொடருக்காக இலங்கை அணி சார்பில் கிளிநொச்சி மாணவிகள் இருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன், சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அத்துடன் மிக குறுகிய காலத்திற்குள் பயிற்சிகளைப் பெற்று கடந்த வருட இறுதிப் பகுதியில் நடைபெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்ட ரோல் போல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அணிகளும் மூன்றாம் இடத்தினைப் பெற்றன. Read more

kumar gunaratnamமுன்னிலை சோஷலிசக் கட்சியின் இணைப்புச் செயலாளர் குமார் குணரட்னத்திற்கு இம் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் குமார் குணரட்னம் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

weமுல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து, மூன்றாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது காணிகள் விடுவிக்கப்படும் என படையினராலும் அதிகாரிகளினாலும் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதனை நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து, தொடங்கிய போராட்டம், இரவு பகலாக கேப்பாப்புலவில் உள்ள படையினரின் முகாம் முன்பாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

smoke bombபல்கலைக்கழக மாணவர்களினால் இன்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியின் மீது பொலிஸார் நீர்த் தாரை மற்றும் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிர்ப்புப் தெரிவிக்கும் வகையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக மருதானை – புஞ்சி பொரளை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. Read more

ctb protestஇலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இ.போ.ச பேருந்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கல்களுக்கு கண்டனம் தெரிவித்தும் வட மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டுவரும் நிலையில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.இன்றைய தினம் காலை 9 மணி முதல் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இ .போ.ச ஊழியர்கள் “இ.போ.ச வின் தனித்துவத்தை சிதைக்காதே”, “வடமாகாண போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா?”, என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு இந்த கவனயீர்ப்பு பணிபகீஸ்கரிப்பு இடம்பெற்று வருகிறது.

 Read more

lanka indonesiaஇந்தோனேஷியாவில் இலங்கைக்கான தூதுவராலயம் இன்று திறக்கப்படவுள்ளது. இதன்படி இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் இணைந்து இதனை திறந்து வைக்கவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தோனேஷியாவுக்கு விஜயம் செய்துள்ள மங்கள சமரவீர, நேற்று அந்த நாட்டு ஜனாதிபதியை சந்தித்தார். அத்துடன், இந்தோனேஷிய பாராளுமன்ற சபாநாயகரையும் அவர் சந்தித்துள்ளார்.

mahinda desapriya (3)எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் அறிவிப்பது மேலும் பிற்போடப்பட்டுள்ளதால், வெசாக் பண்டிகைக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த இயலாது என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எல்லை நிர்ணயம் தொடர்பக காணப்படும் தொழில்நுட்ப குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வது நாடாளுமன்றுக்குரிய பொறுப்பாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Read more