எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 23ம் திகதிவரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ரோல் போல் தொடருக்காக இலங்கை அணி சார்பில் கிளிநொச்சி மாணவிகள் இருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன், சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அத்துடன் மிக குறுகிய காலத்திற்குள் பயிற்சிகளைப் பெற்று கடந்த வருட இறுதிப் பகுதியில் நடைபெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்ட ரோல் போல் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அணிகளும் மூன்றாம் இடத்தினைப் பெற்றன. மேலும் பெரியளவிலான வசதிகள் எவையும் இன்றியே இவர்கள் குறித்த பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக பயிற்சியில் ஈடுபடுவதற்கு கிளிநொச்சியில் இவர்களுக்கான ஒரு பிரத்தியேக உள்ளரங்கம் கூட இல்லாதநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.