sri lankan americaஅமெரிக்காவில் விதிக்கப்பட்ட பயண தடை காரணமாக அந்நாட்டு விமான நிலையங்களில் இலங்கையர்கள் பாதிப்புக்குள்ளாகி இருந்தால், அவர்கள் நியூயோர்கில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அறியத்தருமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கையர்கள் 001 917 597 7009 எனும் இலக்கத்தினூடாக நியூயோர்கில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு அறிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவில் விதிக்கப்பட்ட பயண தடை காரணமாக இலங்கையர்களுக்கு அந்நாட்டு விமான நிலையங்களில் பாதிப்புக்கள் இல்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.இலங்கையர்கள் அந்நாட்டு விமான நிலையங்களில் சிக்கியுள்ளதாக அண்மைய ஊடக அறிக்கைகைகள் தெரிவித்தன. எனினும், குறித்த அறிக்கையை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.