mahinda desapriya (3)எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் அறிவிப்பது மேலும் பிற்போடப்பட்டுள்ளதால், வெசாக் பண்டிகைக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த இயலாது என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எல்லை நிர்ணயம் தொடர்பக காணப்படும் தொழில்நுட்ப குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வது நாடாளுமன்றுக்குரிய பொறுப்பாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தலை விரைவாக நடத்துமாறு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், சட்டத்தில் காணப்படும் தொழில்நுட்ப குறைபாடுகளை 14 முதல் 30 நாட்களுக்குகள் நிவர்த்தி செய்யலாம் என இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் அறிவிக்கும்வரை சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கூறியுள்ளார்.