ctb protestஇலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இ.போ.ச பேருந்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கல்களுக்கு கண்டனம் தெரிவித்தும் வட மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டுவரும் நிலையில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.



இன்றைய தினம் காலை 9 மணி முதல் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இ .போ.ச ஊழியர்கள் “இ.போ.ச வின் தனித்துவத்தை சிதைக்காதே”, “வடமாகாண போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா?”, என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு இந்த கவனயீர்ப்பு பணிபகீஸ்கரிப்பு இடம்பெற்று வருகிறது.

 மேலும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக இ.போ.ச ஊழியர்கள் கூறுகையில், இ.போ.சவின் தனித்துவத்தை சிதைக்கும் வகையில் வவுனியா மாவட்டத்தில் தனியார் பேருந்து நிலையமும் இ.போ.ச பேருந்து நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் இ.போ.ச பேருந்துகள் மீது தனியார் பேருந்து சார்ந்தவர்களால் தாக்குதல்களும் நடத்தப்படுகிறது. இதனை கண்டித்தே இந்த பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாகவும்,

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் உள்ள 7 இ.போ.ச சாலைகள் இந்த பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.