Header image alt text

Sivajilingamஐந்து அம்சகோரிக்கையை முன்வைத்து 69வது சுதந்திர தினமான 04.02.2017 சனிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக கறுப்புப் பட்டி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை 69வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காணாமல் போனவர்கள் விடயம், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு, மீளக் காணிகள் சுவீகரிக்கப்படக் கூடாது, இனப்படுகொலைக்கு நீதி, சர்வதேச விசாரணை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து காலை 8 மணிமுதல் 10 மணிவரை அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார். Read more

maithiriநாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த 300க்கும் அதிகமான மாணவர்கள் ஒன்று திரண்டு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயலாற்றுவோம் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தினால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய ஒருமைப்பாட்டுக்கான மாணவர் தலைமைத்துவ மாநாட்டில் உறுதிமொழியை வழங்கினர். இந்த மாநாட்டின் இறுதி நிகழ்வில், பிரதம விருந்தினராக சனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார். தேசிய நல்லிணக்கம் தொடர்பான மாணவர் தலைமைத்துவ மாநாடு, அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டிருந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க வாரத்தில் நடைபெற்றிருந்தது. Read more

cinaஒரே நேரத்தில் 10 அணுகுண்டுகளை ஏந்திச் சென்று வீசக்கூடிய ஏவுகணையின் புதிய ரகத்தை சீனா ரகசியமாக சோதித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: தனது டிஎஃப்-5 ஏவுகணையின் புதிய ரகத்தை சீனா கடந்த மாதம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்தப் புதிய ரக ஏவுகணை, ஒரே நேரத்தில் 10 அணுகுண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் கொண்டது. இதில் பொருத்தப்படும் ஒவ்வோர் அணுகுண்டும் தனித் தனியாக வௌ;வேறு இலக்குகளைக் குறி வைத்துத் தாக்கக் கூடியவை ஆகும். Read more