ஒரே நேரத்தில் 10 அணுகுண்டுகளை ஏந்திச் சென்று வீசக்கூடிய ஏவுகணையின் புதிய ரகத்தை சீனா ரகசியமாக சோதித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: தனது டிஎஃப்-5 ஏவுகணையின் புதிய ரகத்தை சீனா கடந்த மாதம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்தப் புதிய ரக ஏவுகணை, ஒரே நேரத்தில் 10 அணுகுண்டுகளை ஏந்திச் செல்லும் திறன் கொண்டது. இதில் பொருத்தப்படும் ஒவ்வோர் அணுகுண்டும் தனித் தனியாக வௌ;வேறு இலக்குகளைக் குறி வைத்துத் தாக்கக் கூடியவை ஆகும்.ஷhன்க்ஸி மாகாணம், தாயுவான் ஏவுகணைத் தளத்திலிருந்து இந்த புதிய ஏவுகணை சோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணை சோதனையை அமெரிக்க உளவு நிறுவனங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வந்தன. சீனாவில் நடைபெறும் ராணுவ ரீதியிலான சோதனைகளை அமெரிக்க உளவுத் துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் கேரி ரோஸ் தெரிவித்தார்.
தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவும், அமெரிக்க நிலைகளுக்கு எதிரான தனது ராணுவ வலிமையை அதிகரிக்கவும் சீனா முயற்சி செய்து வரும் நிலையில், இந்த சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த புதிய ரக ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டிருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏன அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.