sf (1)மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை சேர்மன் வீதியிலுள்ள ராமலிங்கம் யோகராசா என்பவரின் குடிசை வீடு கடந்த 02ஆம் திகதி எதிர்பாராத விதமாக தீப்பிடித்தமையினால் வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாகின. அத்துடன், உடுதுணிகூட இல்லாத நிலையில் 7பேர் கொண்ட குறித்த குடும்பம் மரத்தின் கீழ் நிர்க்கதிக்குள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில் 02.02.2017அன்று தீயினால் எரிந்த வீட்டுப் பகுதிக்கு 03.02.2017 அன்றுகாலை சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் முதல் கட்டமாக பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்ததோடு, மீண்டும் அவர்களுக்கான ஏனைய உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். தொடர்ந்தும் தமது அவதானம் இக் குடும்பத்தின் மீது இருந்து கொண்டேயிருக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

image-0-02-06-0e7c5d51e1c2241ea9546a5c2cff2379135a9d096c5a7ce6ad67594c9bbe6a18-V sf (2) sf (4) sf (3)