fdfdமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சத்துருக்கொண்டான் பிரதேசத்திலுள்ள ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய கதவுகள் உடைக்கப்பட்டு இனந் தெரியாதவர்களினால் ஆலயத்திலுள்ள பெறுமதியான பொருட்கள் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றுகாலை வேளையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஆலயத்திற்கு அருகிலுள்ள நீரோடைக்கு அருகில் ஆலயத்தின் உண்டியல் கிடப்பதை கண்டதுடன், குறித்த விடயத்தை ஆலய அரங்காவல் சபையினரிடம் தெரியப்படுத்தியதும் நிருவாகம் ஆலயத்தை பார்வையிட்டவேளை ஆலயத்தின் கதவுகள் உட்பட ஆலய கூரைகள் உடைக்கப்பட்டு கொள்ளை இடம்பெற்றிப்பதை அறிந்து மட்டக்களப்பு பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். ஆலயத்தின் முன் கதவு உட்பட மூலஸ்தான கதவு, பின் கதவு, ஆலயத்தின் கூறை ஓடுகள் அகற்றப்பட்ட நிலையில், ஆலயத்தின் மூல விக்கிரகத்திலுள்ள 8 பவுண் கொண்ட 4 தங்க மாலை, உண்டியலிலுள்ள பணம், 16000 ரூபாய் பெறுமதியுடைய டீ.வீ.டி பிளேயர், என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலயத்தின் தலைவர் சி.செல்வசீகாமணி தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பொலிஸார் ஊடாக மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.