O Panneer40 நிமிட தியானத்துக்கு பின் முதல்வர் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி; என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தனர், கட்டாயப்படுத்தி கடிதம் வாங்கினர், முதல்வராக்கி அசிங்கப்படுத்தி விட்டனர்,  தொண்டர்கள் விரும்பும் தலைவர்தான் கட்சியை நடத்த வேண்டும், என்னை புறக்கணித்து எம்எல்ஏக்கள் கூட்டம் , சசிகலா முதல்வராக தொண்டர்கள் விரும்பவில்லை,  தன்னந்தனியாக நின்று கடைசி வரை போராடுவேன்,  
மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன்,
ஜெயலலிதா சமாதியில் சசிகலாவுக்கு பகிரங்க சவால் 
ஜெயலலிதா சமாதியில் நேற்றிரவு திடீரென்று அமர்ந்து 40 நிமிடம் தியானம் செய்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்இ தன்னை கட்டாயப்படுத்தியதால்தான் ராஜினாமா செய்தேன். தொடர்ந்து தன்னந்தனியாக தொடர்ந்து போராடுவேன். ராஜினாமாவை திரும்ப பெறுவேன் என்று பரபரப்பு பேட்டியளித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அன்று நள்ளிரவே பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்றது. அதன்பின் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆட்சி ஒருவரிடமும் கட்சி ஒருவரிடமும் இருந்ததால் இருவரும் இரு துருவங்களாக செயல்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 5ம் தேதி மூத்த அமைச்சர்களுடன் சசிகலா போயஸ்கார்டனில் ஆலோசனை நடத்தினார். அப்போது பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வதாக அவர் எழுதிய கடிதம் கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்டது. அதன்பின் தலைமைக் கழகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில் சட்டப்பேரவை கட்சியின் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்து வந்தது. ஜெ. சமாதியில் தியானம்: ஆனால் கவர்னர் வித்யாசாகர் ராவ் அப்போது ஊட்டியில் இருந்ததால் உடனடியாக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அவரிடம் கொடுக்க முடியவில்லை. பின் கவர்னர் டெல்லி சென்றார். அங்கிருந்து மும்பை சென்று விட்டார். அவர் எப்போது திரும்பி வருவார் என்பது உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக வீட்டில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 9 மணிக்குஇ திடீரென்று ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியவர் திடீரென்று கண்களை மூடி சமாதி முன்பு அமர்ந்தார். தொடர்ந்து 40 நிமிடங்கள் தியான நிலையில் இருந்தார். பின்னர் தனது தியானத்தை முடித்துக் கொண்டு சமாதியை ஒரு முறை சுற்றி வந்தார். பின்னர் மண்டியிட்டு வணங்கினார். அதன்பின் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். மவுனத்தை கலைத்தார்: அந்த நேரத்தில் ஜெயலலிதா சமாதியை சுற்றிப் பார்க்க வந்திருந்தவர்கள் பன்னீர்செல்வத்தின் போராட்டத்தைப் பார்த்ததும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். இதனால் கூட்டம் அதிகமாக கூடியது. பன்னீர்செல்வம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட தகவல் வெளியானதும் ஏராளமான தொண்டர்களும் அங்கு கூடினர்.

இதனால்இ கூடுதல் கமிஷனர் சங்கர் இணை கமிஷனர் மனோகரன் தலைமையில் போலீசாரும் குவிக்கப்பட்டனர். அதேநேரத்தில்இ பன்னீர்செல்வம்இ வீட்டுக்கு புறப்பட்டு சாலைக்கு வந்து கொண்டிருந்தார். ஆனால் ஏராளமான பத்திரிகையாளர்கள் கூடி  திடீர் தியானப் போராட்டத்துக்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர். கூட்டம் அதிகமாக இருந்ததால்  9.55 மணிக்கு தனது மவுனத்தை கலைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு நான் அமைதியாக என் மனசாட்சி தூண்டப்பட்டதால் அம்மாவின் ஆன்மா இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கும்இ புரட்சித் தலைவியின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

அம்மா நோய்வாய்ப்பட்டு அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவருடைய உடல்நிலை மோசமான நிலையை எட்டியபோது என்னை அழைத்து உடல்நிலை மோசமாக இருக்கிறது. கட்சியும், ஆட்சியும் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றார்.
சசிகலா சொன்னார் எனவே கழக பொதுச்செயலாளராக மதுசூதனன் இருக்க வேண்டும் நீங்கள் முதல்வராக இருக்க வேண்டும் என்று சசிகலா சொன்னார். நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இரண்டு முறை ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டபோது அம்மா அவர்கள் என்னை அழைத்து முதல்வராக இருக்க சொன்னார்கள். சூழ்நிலை கருதி ஏற்றுக்கொண்டேன். அம்மா அவர்களுக்கு மீண்டும் முதல்வர் பதவியை திருப்பிக்கொடுத்த மனநிலையே போதும். மீண்டும் ஒரு முறை அம்மா இல்லாத நேரத்தில் என்னால் அந்த பதவி ஏற்க முடியாது. எனக்கு வேண்டாம். வேறு யாராவது நீங்கள் முடிவு பண்ணி கழகத்தின் உடன்பிறப்புகள் பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவரை தேர்வு செய்யலாம் என்று சொன்னேன்.

ஆனால் அவர்கள் என்னை விடாப்படியாக உங்களைச் சொன்னால்தான் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் இல்லாமல் இன்னொருவரை சொன்னால் இரண்டு முறை அம்மா அவர்களால் அடையாளம் காணப்பட்டவரை விடுத்து  இன்னொருவரை தேர்வு செய்திருக்கிறார்கள் என்ற விமர்சனம் கட்சிக்கு வந்து சேரும். அதனால் கட்சிக்கும்இ ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்ற நிலை உருவாகும். அது உங்களால் ஏன் உருவாக வேண்டும் என்றார். அதனால் நான் ஒப்புக்கொண்டேன்.

முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட 2,3 தினங்களில் என்னை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து சந்தித்து திவாகர் சார் வந்து உங்களை கேட்கச் சொன்னார். நீங்களெல்லாம் அமைச்சர்களாகிவிட்டீர்கள். நான் என்னுடைய அக்காவை ஊருக்கு கூட்டிச் சென்று விடுகிறேன் என்றார். அப்போது விஜயபாஸ்கரிடம் நான் என்ன செய்ய வேண்டும ்என்று கேட்டேன். கட்சியின் பொதுச் செயலாளராக அவரை(சசிகலாவை) கொண்டு வரவேண்டும் என்று விரு்ம்புகிறார்கள். முதலில் சொன்னது கட்சியின் பொதுச் செயலாளராக மதுசூதனனை ஆக்க வேண்டும் என்று. இப்போது இப்படி சொல்கிறார்களே என மிகவும் யோசித்தேன். அந்த நேரத்தில் சீனியர் அமைச்சர்களை எல்லாம் என்னுடைய வீட்டுக்கு அழைத்து பேசினேன். அவர்களும் அந்த கருத்துக்கு ஒத்துக் கொண்டுஇநேராக சென்று சின்னம்மாவிடம் அந்த கருத்தை சொன்னேன். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். அதற்கு பின்னர் பொதுக்குழு கூடியது. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  நான் முதல்வராக என்னுடைய பணியை அம்மா எப்படி ஆட்சிக்கு புகழ் சேர்த்தார்களோ அதேபோல் எவ்வித குறையும் பங்கமும் ஏற்படாமல் எனது பணியை ெசய்தேன்.

அப்போது எதிர்பாராதவிதமாக வர்தா புயல் வந்தது. நான் அமைச்சர்கள் பொதுமக்கள் அனைவரும் அந்த பணியில் ஈடுபட்டு நான்கே நாட்களில் சீரமைத்தோம். அரசுக்கு நல்ல ெபயர் வந்தது. இது சின்னம்மாவுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது. அதன்பின் சென்னை மாநகரின் குடிநீர் தேவைஇ குடிநீருக்காக ஜனவரியில் இருந்து மே, ஜூன் வரைக்கும் 7 மாதத்திற்கு குறைந்தபட்சம் 7 டிஎம்சி நீர் தேவைப்படும். நம்முடைய நான்குஇ நீர்தேக்கங்களிலும் ஒரு டிஎம்சிக்கும் குறைவான நீர்தான் இருந்தது. அதிகாரிகளை கூப்பிட்டு ஆலோசனை நடத்தினேன். ஆந்திராவில் கால்வாய் மூலமாக கண்டலேறு ஏரியில் 36 டிஎம்சி வாங்கலாம் என்று அறிந்து ஆந்திரா சென்று முதல்வரை சந்தித்து குடிநீர் பெற்றேன்.

அதன்பின் மெரினா கடற்கரை பகுதியில் ஜல்லிக்கட்டு போராட்டம் வலுவடைந்தது. மாணவர்களே சட்டம் ஒழுங்கை போலீசுடன் சேர்ந்து எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல்இ 4 நாள் நடத்திக் கொண்டிருந்தார்கள். நான் அதை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று நாட்டினுடைய பிரதமர் மோடியை சந்தித்து நிலைமை குறித்து விளக்கினேன். இதற்கு ஒரு அவசர சட்டம் தேவை. இந்த சட்டம் மத்திய அரசின் ஒப்புதலோடுஇ ஜனாதிபதியின் ஒப்புதல் தேவை என்று கேட்டபோது மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர இடம் இல்லை. நாங்கள் கொண்டு வந்த சட்டத்தில்தான் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீங்கள் ஒரு சட்டம் கொண்டு வந்தால்இ அதற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம். ஒத்துழைப்பு தருகிறோம் என்று சொன்னபோதுஇ உச்சநீதிமன்றத்தின் சட்ட வல்லுநர்களை எல்லாம் அழைத்துப் பேசி அவர்களும் உடனடியாக ஒரு சட்டம் கொண்டு வந்து அதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் உள்துறை சட்டத்துறை ஒப்புதலோடு அவசர சட்டம் உருவானதது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

 அதன்பின்னரும் நமது போராட்டக்காரர்கள் நிரந்தர சட்டம் வேண்டுமென்று கேட்டார்கள். 65 வருட இந்திய நாட்டின் வரலாற்றில் ஆளுநர் உரைக்கு பிறகு மாலையில் சபை கூடியதில்லை. இருந்தாலும் சபை கூடியது. நிரந்தரச் சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.நான் ஒரு பக்கம் பிரதமரை பார்க்கச் செல்கிறேன். தம்பிதுரை 50 எம்பிக்களை கூட்டிக் கொண்டுஇ பிரதமரை பார்க்க முயன்றார். முதல்வர் வந்திருக்கிறார். அவரை முதலில் சந்திக்கிறேன். இருவரும் ஒரே கோரிக்கைக்காகத்தான் வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு பிறகு தருகிறேன் என்று பிரதமர் சொன்னார்.

இதனால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை மன வருத்தத்தை இங்கு வந்து சொ்ன்னபோது அதற்குரிய பரிகாரம் எனக்கு கிடைக்கவில்லை.
அதற்கு அடுத்த நிகழ்வாக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் சின்னம்மாதான் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார.் நான் உடனடியாக சசிகலா கவனத்துக்கு கொண்டு சென்றேன். என்னுடைய அமைச்சரவையில் இருக்கிறவரே இன்னொருவரை முதல்வர் என்கிறார். அது நீதிக்கு நியாகத்துிக்கு தர்மத்துக்கு சரிதானா?. ஆளுநர்இ என்னை கூப்பிட்டு உங்களுக்கு கீழ் இருக்கும் அமைச்சரே கருத்து தெரிவித்துள்ளபோது சட்டமன்றத்தில் உங்களது பலத்தை நிரூபித்து காட்டுங்கள் என்று சொன்னால் தேவையில்லாமல் ஒரு பிரச்னை வருமே என்று நான் சொன்னபோதுஇஎனக்கு மீண்டும் தொலைபேசி மூலம்  உதயகுமாரை கூப்பிட்டு கண்டித்து விட்டோம். இனிமேல் அப்படி யாரும் பேச மாட்டார்கள் என்றார்கள்.

 அதன்பிறகு என் அறைக்கு வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ  எங்களுக்கு மன வருத்தமாக இருக்கிறது. சட்டத்துக்கு புறம்பாக  எதற்காக இப்படி ஒரு பேட்டி கொடுத்தார் என்று சொன்னார். இதன்பிறகு மதுரைக்கு சென்று  அவரும் அதேபோல பேட்டி கொடுக்கிறார்.அதற்கு அடுத்த நாள் தம்பித்துரை எம்பியும் தனது கடிதத்தின் வாயிலாக அதே கருத்தை வலியுறுத்துகிறார். செங்கோட்டையனும் அதே கருத்தை வலியுறுத்துகிறார். நான் சில அமைச்சர்களை எம்எல்ஏ–்க்களை அழைத்து கட்சியின் ஒற்றுமை கருதி ஆட்சியில் கருத்து வேற்றுமை இருக்கக் கூடாது என்பதற்காக  நான் பதவி வேண்டாம் என்று சொன்னேனே. என்னை முதல்வராக உட்கார வைத்துவிட்டு ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள். இது தேவைதானா? இதனால்இ நாட்டு மக்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள். தொண்டர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

அம்மா அவர்கள் 28 ஆண்டு காலம் இயக்கத்தை சோதனை தாங்கி வேதனை தாங்கி இந்த இயக்கத்தை நடத்தினார். எம்ஜிஆர் இருந்தபோது 18 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக மாற்றி உருவாக்கித் தந்தார். அந்த இயக்கத்தை 2011ல் ஆட்சியில் அமர்த்தி 2016ல் மீண்டும் ஆட்சியை கொண்டுவந்து சாதித்துக் காட்டினார். பல்வேறு திட்டங்கள் மூலம் இ தமிழக மக்கள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள மக்கள் மட்டுமல்லஇ உலகத்தில் உள்ள மக்களும் சாதனை மிகுந்த ஆட்சியை பாராட்டும் வகையில் கட்சியையும் ஆட்சியையும் நடத்தியிருக்கிறார்கள்.

இதனை நாம் கட்டுப்பாட்டோடு, கவனத்தோடு வேறுபாடு இல்லாமல் பொறுப்பாக நடந்து கொள்கிற ஒரு சூழ்நிலையைத்தான் நம்மை போன்ற சீனியர்கள் செய்ய வேண்டும். என்னை முதல்வராக உட்கார வைத்துக்கொண்டு இப்படி பேசுவது சரியல்ல. என்னை தனிப்பட்ட முறையில் இகழ்ச்சியாக பேசினாலோ அவமானப்படுத்தி பேசினாலோ பொறுத்துக்கொள்வேன். பொது வாழ்வுக்கு வந்தால் அவமானங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். மனசாட்சி பிரகாரம் நாம் நடக்க வேண்டும்.

 அதைவிடுத்து முதல்வர் பதவி பற்றி பேசியதால்இ என் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அதை பலரிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறேன். அவர்களும் வருத்தப்பட்டனர். என்னால் கட்சிக்கு ஆட்சிக்கு எந்த பங்கமும் சின்ன கடுகு மணி அளவுக்கு கூட ஏற்பட்டு விடக்கூடாது. அது சரித்திரத்தில் நம்மை வேறு மாதிரி உருவகப்படுத்தும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் இதை நான் யாரிடமும் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை.
இந்த சூழ்நிலையில்தான் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்து எம்எல்ஏக்களையும் தலைமைக் கழகத்தில் உட்கார வைத்து கையெழுத்து பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். கடந்த 5, 6 நாட்களாக எண்ணூரில் கடலில் கொட்டிய எண்ணெய் படலத்தை அகற்றுவதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் சேர்ந்து பணிகளை செய்தது. அதை பார்ப்பதற்காக அங்கு சென்று அந்தப் பணிகளை தொய்வில்லாமல் முடிக்க வேண்டும்  என்று அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்தேன்.

 பின்னர் அம்மாவின் வீட்டுக்குச் சென்றபோது கட்சியின் மூத்த தலைவர்கள், மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் இருந்தனர். பொதுச் செயலாளரின் குடும்பத்தினரும் உட்கார்ந்திருந்தனர். நானும் அமர்ந்தேன். அப்போதுதான் சின்ன்மமா முதல்வராக வருவதற்கு அனைவரும் சேர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். தமிழகத்தில்  அம்மாதிரியான சூழல் இல்லை என்பதை மனதில் நினைத்து இப்போது என்ன அவசியம் வந்தது என்று கேட்டேன். அவ்ரகள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது. அங்கு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். அந்த சூழலில் முதல்வர் பொறுப்பையும் பொதுச் செயலாளர் பொறுப்பையும் சின்னம்மாவிடம் தரவேண்டும். நீங்கள் தான் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்.

எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது எனக்கு தெரியாது எதற்காக கூட்டப்பட்டது என்று தெரியாது. எல்லா வேலையும் முடித்துவிட்டு நீங்கள்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்களே இது நியாயம்தானா? என்றேன். கிட்டத்தட்ட 2 மணி நேரம் நான் அவ்ரகளிடம் விவாதம் செய்தேன். முன்பே முதல்வர் பதவி வேண்டாம் என்று சொன்னேனே. நீங்கள்தான் முதல்வர் பொறுப்பில் இருங்கள் என்று சொன்னீர்கள் என நான் வருத்தத்தோடு எடுத்துச் சொன்னபோது யாரும் எதுவும் பேசவில்லை. கடைசியாக என் கையைப் பிடித்துக் கொண்டு அந்த நிலையிலும் கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்றுங்கள். நீங்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக ஆகும் என்று என்னை கட்டாயப்படுத்தினார்கள். அம்மாவின் நினைவிடத்துக்குச் சென்று என் தாயிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என்று சொன்னேன். அதற்கு கூட அவர்கள் இடம் கொடுக்காமல் பின்னர் சொல்லிக் கொள்ளலாம் என்று மறுத்து என்னை கட்டாயப்படுத்தியதால்தான் நான் அந்த ராஜினாமா செய்ய வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.

 இதை தெரியப்படுத்துவதற்காகத்தான் அம்மாவின் ஆன்மா இருக்கின்ற இடத்தில் வந்து நான் நிற்கிறேன். இதை நாட்டு மக்களுக்கும் கோடானகோடி தொண்டர்களுக்கும் தெரியப்படுத்திவிடு என்று அம்மாவின் ஆன்மா சொன்னதின் அடையாளமாகத்தான் நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். கட்சிக்கும் கழக பொதுச்செயலாளராக அதிமுக அடிமட்ட செயல்வீரர்கள் ஒட்டுமொத்த செயல்வீரர்கள் ஏற்கிற ஒருவர்தான் கட்சியின் பொதுச் செயலாளராக வரவேண்டும். மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் தமிழகத்தின் எதிர்கால நலனை கருத்தில்கொண்டு ஓபிஎஸ் இல்லை யாரோ ஒருவர் கழகத்தை கட்டுக்கோப்பாக வழி நடத்தும் ஒருவரை ஆட்சியை அம்மா இன்றைக்கு ஏற்படுத்திய நல்ல பெயரை காப்பாற்றுகின்ற ஒருவர் வரவேண்டும ்என்று நல்ல அடிப்படையில் இந்த கருத்தை பதிய வைக்கிறேன். இந்தக் கருத்தில் நான் கடைசி வரை உறுதியாக இருப்பேன். தன்னந்தனியாக நின்று நான் போராடுவேன். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். மக்கள் விரும்பினால் என்னுடைய ராஜினாமாவை திரும்பப் பெறுவேன்.   இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.