Header image alt text

qweqwவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முன்னாள் யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். நாளை மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது. Read more

P1410574யாழ். ஏழாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றுகாலை 7.00மணியளவில் ஏழாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், முன்னைநாள் கிராம சேவையாளர் ஞானசபேசன், ஏழாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், செயலாளர் அங்கத்தவர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஏழாலை சொர்ணாம்பிகை சமேத அம்பலவாணேசுரர் ஆலயத்தால் வழங்கப்பட்ட மேற்படி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான காணியில் புதிய கட்டிடத்தினை கட்டி முடிப்பதற்கு 40லட்சம் ரூபாய் செலவாகுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. Read more

australiaகிழக்கு மாகணத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு அவுஸ்ரேலியா உதவுமென இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் ப்றேயிஸ் ஹ்ட்சன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளில் தேவைகளை கவனிக்கவேண்டி இருப்பதால் தகுந்த பயிற்சியும் ஆலோசனைகளும் உல்லாசப் பயணத்துறையில் புதிதாக இணைவோருக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வாழ்க்கைத்திறன் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து கிழக்கிலும் வட மத்திய மாகாணத்திலும் பயிற்சிகள் அளிக்கப்படும். Read more

kiriyellaபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என, சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் விமல் வீரவங்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தேசியப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பில், 13ம் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகாண எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை தற்போது புதிய அரசியலமைப்பின் நிமித்தம் ஒரு பிரிவையேனும் தயாரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

courtsயாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்புச் சம்பவத்தில் சந்தேகநபர்களான ஐந்து பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் யாழ். பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. Read more

sfயாழ். அரியாலை நெலுக்குளம் பகுதியில் இராணுவத்தினர் பயணித்த வாகனம் ரயிலுடன் மோதுண்டதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்தநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றுமுற்பகல் 10.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பயணித்த குறித்த இராணுவ வாகனம்மீது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியதுடன் அந்த வாகனத்தை 300மீற்றர் வரை இழுத்து சென்றுள்ளது. Read more

dgfgfgfவடமாகாணத்திலுள்ள தனியார் பஸ் சாரதிகள், ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளைக் கண்டித்தே இப் பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகளுக்கும், தனியார் பஸ் சாரதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக முரண்பாடுகளும் கைகலப்புகளும் இடம்பெறுவதுடன், இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள், கடந்த 2ஆம் திகதிடு, புறக்கணிப்பில் ஈடுபட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

fsdsweமுல்லைத்தீவு, கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் நில மீட்புப் போராட்டத்துடன் வவுனியாவிலிருந்து சென்ற சிலரும் இணைந்து கொண்டுள்ளனர்.

பிலக்குடியிருப்பு விமானப்படை முகாமை அகற்றி, தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பிலக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து 10ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படைத் தளத்திற்கு முன்பாக உள்ள வீதியிலிறங்கி மக்கள் நேற்று முதல் மறியல் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சொந்த நிலத்தில் குடியேறும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதே இவர்களது நிலைப்பாடாக அமைந்துள்ளது.

l2யாழ். பொன்னாலை வரதராஐப்பெருமாள் வித்தியாலயத்திற்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து 14 வெற்றிக்கிண்ணங்களும் 80 பெண்சில் பெட்டிகளும் பாடசாலை அதிபரிடம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி பாடசாலையின் அதிபரினால் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியினை முன்னிட்டு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பெண்சில் பெட்டிகளை தந்துதவுமாறு விண்ணப்பம் செய்யப்பட்டதற்கு இணங்க வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் இவ் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. Read more