யாழ். பொன்னாலை வரதராஐப்பெருமாள் வித்தியாலயத்திற்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து 14 வெற்றிக்கிண்ணங்களும் 80 பெண்சில் பெட்டிகளும் பாடசாலை அதிபரிடம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி பாடசாலையின் அதிபரினால் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியினை முன்னிட்டு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பெண்சில் பெட்டிகளை தந்துதவுமாறு விண்ணப்பம் செய்யப்பட்டதற்கு இணங்க வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் இவ் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. பாடசாலைக்கான வெற்றிக்கிண்ணங்களுக்கான அனுசரணையினை எமது அவுஸ்ரேலியா கிளையினைச் சேர்ந்த திரு.ச.யோகநாதன் அவர்களும், பென்சில் பெட்டிகளுக்கான அனுசரணையினை எமது கொழும்புக் கிளையினைச் சேர்ந்த திரு.கு.nஐயந்திரன் அவர்களும் வழங்கியுள்ளனர். இவர்களுக்கு பாடசாலை சமூகத்தின் சார்பிலும் தாய்ச் சங்கத்தின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).