australiaகிழக்கு மாகணத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு அவுஸ்ரேலியா உதவுமென இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் ப்றேயிஸ் ஹ்ட்சன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளில் தேவைகளை கவனிக்கவேண்டி இருப்பதால் தகுந்த பயிற்சியும் ஆலோசனைகளும் உல்லாசப் பயணத்துறையில் புதிதாக இணைவோருக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வாழ்க்கைத்திறன் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து கிழக்கிலும் வட மத்திய மாகாணத்திலும் பயிற்சிகள் அளிக்கப்படும். தொழில் நுட்ப உதவி, பணரீதியான உதவி என்று அவுஸ்ரேலியா 1.6 பில்லியன் ரூபா உதவியை வழங்கும். இத்திட்டத்தில் வேலை இல்லாதவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் .அங்கவீனர்களும் கருத்தில் கொள்ளப்படுவார்கள். மட்டக்களப்பில் இது சம்பந்தமாக திறக்கப்பட்டுள்ள அலுவலகம் உள்நாட்டு வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டதாக இருக்கும் என்று உயர் ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.