P1410789தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி இன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் முன்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். கல்லடி மணிக்கூட்டு கோபுரம் முன்பாக ஆரம்பமான எழுக தமிழ் பேரணி, நாவற்குடா மைதானத்தில் எழுக தமிழ் நிகழ்வு இடம்பெறும் மைதானம் வரை சென்றது. வடக்கு கிழக்கு இணைப்பு, இராணுவத்தினர் வெளியேற்றம், காணாமல் போனோரை கண்டுபிடித்தல் உட்பட பல கோசங்கள் அடங்கிய பதாதைகளையும் ஊர்வலத்தில் ஏந்திச் சென்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து எழுக தமிழ் பொதுக்கூட்டம் நண்பகல் பகல்; 12.00 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது எழுக தமிழ் பிரகடனத்தை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா வாசித்தார்.

இக்கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

P1410604 P1410611 P1410613 P1410615 P1410618 P1410620 P1410622 P1410624 P1410626 P1410628 P1410630 P1410632 P1410634 P1410636 P1410639 P1410640 P1410643 P1410646 P1410648 P1410653 P1410658 P1410659 P1410664 P1410672 P1410677 P1410678 P1410679 P1410683 P1410684 P1410692 P1410693 P1410695 P1410698
P1410703 P1410704 P1410707 P1410714 P1410749 P1410746 P1410745 P1410735 P1410728 P1410724 P1410716 P1410751 P1410754 P1410755 P1410757 P1410758 P1410763 P1410765 P1410770 P1410775 P1410779 P1410781 P1410783 P1410785 P1410789