கிழக்கிலும் வடக்கிலும் வாழுகின்ற தமிழர்கள் எப்போதும் ஒரே குரலில்தான் பேசுவார்கள். எப்போதும் ஒரே குரலில் தான் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று நீங்கள் உலகிற்கு ஒரு செய்தியைச் சொல்லியுள்ளீர்கள் என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் தேசிய உணர்விலும் போராட்டத்திலும் வேறு எந்த மாவட்டத்திற்கும் சலைத்தது அல்ல. கிழக்கு மாகாணத்திலே அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்துதான் அனைத்து இயக்கங்களுக்கும் மிகப் பெருந்தொகையான இளைஞர்கள் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்வதற்கு சேர்ந்தார்கள் என்ற உண்மையை நான் இங்கு கூறித்தான் ஆகவேண்டும். Read more