q2ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கி.லதீஸ் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள 102 பெண் சிறார்கள் தங்கியிருக்கும் பாரதி இல்ல உணவு களஞ்சியத்திற்கு இன்று 250 கிலோ சம்பா அரசிப் பைகளை அன்பளிப்பாக வழங்கி அவர்களின் களஞ்சியத்தில் உள்ள அரிசி இருப்பை மேலும் உறுதிபடுத்தியுள்ளார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு இல்ல சிறார்களின் உணவு பொருட்களின் இருப்பை உறுதிபடுத்தியுள்ள கி.லதீஸ் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்ல சிறார்கள் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்ளும் தருணம் இவர் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள்ளுடன் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்ந்து நற்பணிகள் செய்து வாழ இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).

q2 q