முல்லைத்தீவு கருவேலன்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த குழந்தைகள் கும்மாளம் என்ற பெயரில் விளையாட்டுப் போட்டி நிகழ்வொன்று நேற்று (2017.02.11) சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா அவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். மேலும் கௌரவ விருந்தினர்களாக வைத்தியக்கலாநிதி நிரேகா, விவசாய போதனாசிரியர் சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.