யாழ். கொக்குவில் இராமகிருஸ்ண வித்தியாசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வு கடந்த 07.02.2017 செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா அவர்களும், கௌரவ விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். விருந்தினர்கள் கௌரவிப்பினைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று நிகழ்வுகள் ஆரம்பமாகின. இறுதியாக போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ, மாணவியர்க்கு பரிசில்களை வழங்கிவைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.