தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக கிழக்கு பல்கலைகழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைககள் நிறுவக மாணவர்கள் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் இன்று நண்பகல் வாய்களை கறுப்புத்துணியால் கட்டி பாரிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிறுவகத்தின் வகுப்புகளிலிருந்து வெளியேறிய பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் வீதியில் இறங்கி கல்லூரியின் நுழைவாயிலை மறித்து மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சியே பதில் சொல்.! எமது காணிகள் எமக்கு வேண்டும்.! எமக்கு நீதி தேவை.! எனும் வாசகங்கள் உட்பட பல கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.