erretrஅமெரிக்காவில் சட்டபூர்வமான ஆவணங்கள் எதுவுமின்றி வசித்து வந்த, பல்வேறு சட்டவிரோத குடியேற்றவாசிகளை கண்டுபிடித்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அந்நாட்டு பொலிஸாரும், குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 30லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள். என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். குறித்த வாக்குறுதியிற்கிணங்க, பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவால், அமெரிக்காவிலிருந்து சுமார் 30 இலட்சம் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் பொலிஸாரும், குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. டிரம்பின் குறித்த உத்தரவை தொடர்ந்து அட்லாண்டா, அஸ்டின், சிகாகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயோர்க் மற்றும் கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் ஒவ்வொரு வீடாக அதிரடி சோதனைகள் நடைபெற்று வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்புகளின் போது நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஏனைய மாநிலங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை தொடங்கவுள்ளதாக, அமெரிக்க குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.