Header image alt text

shani abesekaraஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, 5 மாணவர் கடத்தல் உள்ளிட்ட வெள்ளை வேன் கடத்தல்கள், வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம், லசந்த விக்ரமதுங்க படுகொலை விவகாரம் உள்ளிட்ட பிரபல விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக் குழுக்களை வழி நடத்தும் சிறப்பு விசாரணையாளரான சானி அபேசேகர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக (எஸ்.எஸ்.பி.) பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த 2016 ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரொஇயந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.

unஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், எதிர்வரும் மார்ச் மாத அமர்வில், இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் ஒன்றிற்கு பிரித்தானியா அனுசரணை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய தீர்மானம் ஒன்றை பிரித்தானியா கொண்டுவரவுள்ளதாக மனித உரிமை பேரவையின் 34 ஆம் அமர்விற்கான ஏற்பாட்டுக்குழுக் கூட்டத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த அமர்வு தொடர்பான அமைப்புக்கள் ரீதியான கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது. இக் கூட்டத்தில் 34 ஆவது ஜெனீவா அமர்வில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானங்கள் மற்றும் குழு அல்லது பக்கநிகழ்வுகள் உள்ளிட்ட திட்டமிடப்பட்டுள்ள முன்னெடுப்புக்களை பகிர்ந்துகொள்ளுமாறு பிரதிநிதிகளுக்கு மனித உரிமை பேரவையின் தலைவரினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. Read more

asdsdமுல்லைத்தீவு அம்பகாமம் காட்டுக்குள் இருந்து இன்றுகாலை புலிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஆட்லறி செல்கள் சில மீட்கப்பட்டுள்ளன. விமானப் படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு எறிகணையும் 16 கிலோ கிறாம் கொண்டது என்றும் விமானப் படையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த அம்பகாமம் காட்டுப் பகுதிக்கு அருகில்தான் 2009 முன் புலிகள் பயன்படுத்திய விமானப் படைத்தளம் காணப்படுகிறது. தற்போது அது இலங்கை விமானப் படையினரின் பயன்பாட்டில் உள்ளது.

asdsadமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலகமும், வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பும் இணைந்து, உடல், உள மேம்பாட்டு வாரத்தை முன்னிட்டு விளையாட்டு நிகழ்வுகளை இன்று நடாத்தியுள்ளனர்.

வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் சி.பரமானந்தம் அவர்களது தலைமையில் வாழைச்சேனை இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது, கிடுகு பின்னுதல், தேங்காய் திருவுதல், குண்டு, பரிதி எறிதல், அப்பிள் சாப்பிடுதல், வலைப்பந்தாட்டம் உட்பட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. Read more