gfgfgயாழ்ப்பாணம், வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் தற்போதைய அதிபரை மாற்றி முன்னைய அதிபரான திரு. ந.இரவீந்திரன் அவர்களை நியமிக்குமாறு கோரி பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கையெழுத்திட்ட கடிதமொன்று வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கடித்தில், எமது பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்பட்ட பின்னர் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் வேறு பாடசாலைக்கு மாற்றலாகிச் செல்கின்றனர். தரம் 5 வகுப்பிற்கான மேலதிக வகுப்புகள், செயற்பாடுகள், இணைப்பாடவிதான செயற்பாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. மாணவர்களுக்கு வரும் உலக உணவுத்திட்டப் பொருட்கள் மாணவர்கட்டு வழங்கப்படுவதைக் குறைத்து வேறு தேவைகட்டு பய்னபடுத்தப்படுகின்றது. தரம் 5ற்கான மேலதிக வகுப்பு எடுக்கும் ஆசிரியரை மேலதிக வகுப்பு எடுக்கவிடாது வெளித் தேவைகட்டு பயன்படுத்துகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாண்டு பழைய மாணவர், புலம்பெயர் வாழ் பழைய மாணவர்களாலும் மேற்கொள்ளப்படவிருந்த பௌதீக வள விருத்திகள் யாவும் எமது பழைய அதிபர் வருமிடத்து மட்டுமே செயற்படுத்தப்படும் என்றும், ஆகவே பாடசாலையின் மாணவர் கல்வி அபிவிருத்தியையும், பௌதீக வள விருத்தியையும் கருத்திற்கொண்டு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபரை இடமர்ற்றம் செய்து எமது பழைய மாணவரும், எமது கிராம வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டவருமாகிய திரு. ந.இரவீந்திரன் அவர்களை மீள நியமித்து இப்பிரதேசத்தின் வளர்ச்சிக்கு உதவும்படி பணிவன்புடன் வேண்டி நிற்கின்றோம் என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என 60ற்கும் மேற்பட்டோரின் கையெழுத்துடனும் மேற்படி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் வடமாகாணசபை முதலமைச்சர், வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோர்க்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த 02.01.2017 அன்று யாழ்ப்பாணம், வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் அதிபர் பதவி நிலையில் இருந்த திரு. நடராசா ரவீந்திரன் அவர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு சுமார் 90பேரின் கையொப்பத்துடன் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

dfd dfdd sdffd sfdfd