கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியிலுள்ள தமது காணிகளை மீளப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு படையினரின் அச்சுறுத்தல் பல்வேறு வடிவங்களில் விரிவடைந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கேப்பாபுலவு பகுதியில் உள்ள காணியில் போடப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், இது விமானப் படை காணியாகும், தேவையில்லாமல் உட்செல்லல் தடை, தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. விமானப்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளின் ஒருபுற வேலி அடைக்கப்படாது காணப்பட்ட நிலையில் இன்று அந்த பகுதியில் இந்த அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது. Read more