maithriவறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா நிவாரண உதவி வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் உள்ளடங்கிய குழு ஒன்றை ஸ்தாபித்து வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உண்மையான தரவுகளை சேகரித்ததன் பின்னர் இந்த நிவாரண உதவியை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் சிறுபோகம் ஆரம்பிக்கப்படும் வரை இந்த நிவாரணத் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். வறட்சி காரணமாக விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.