யாழ். கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி வித்தியாலயத்தின் அதிபர் கி.தர்மசீலன் அவர்களின் தலைமையில் 16.02.2017 வியாழக்கிழமை நடைபெற்றது.
மேற்படி நிகழ்வின் பிரதம விருந்திரனராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கோ.பாரதராஜமூர்த்தி (பிரதிக் கல்விப் பணிப்பாளர், யாழ் வலயம்) அவர்களும், கௌரவ விருந்தினராக முருகையா சுரேந்திரராஜா (பழைய மாணவர்) அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இறுதியில் வெற்றியீட்டிய மாணவ, மாணவியர்க்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்களுடன், பெருந்தொகையான பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.