fsdகிளிநொச்சி குமாரசாமிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கு ரூபா 20,920 பெறுமதியான கணித உபகரணப்பெட்டிகள், பென்சில் பெட்டிகள், கலர் பெட்டிகள் மற்றும் உடற்பயிற்சிக்கான ஆடைகள் என்பன இன்று வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைச் செயலகத்தில் வைத்து பாடசாலை ஆசிரியர் திருமதி.ஜெசிந்தா ராகவன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த தேவைக்கான விண்ணப்பமானது பாடசாலை அதிபரினால் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க பாடசாலை மாணவர்களின் கல்வியினையும் திறன் விருத்தி செயற்பாடுகளையும் ஊக்குவிக்கும் முகமாக வழங்கப்பட்டுள்ளது.இதற்கான நிதி அனுசரணை எமது அவுஸ்ரேலியா கிளைச் சங்கத்தின் உறுப்பினரான திரு ஜெயறஞ்சன் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது. எமது தாய் சங்கத்தின் சார்பிலும் மற்றும் பாடசாலை சமூகத்தின் சார்பிலும் திரு.ஜெயறஞ்சன் அவர்களுக்கு நன்றிகளை கூறிக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்).