யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி 17.02.2017 வெள்ளிக்கிழமை அன்று பாடசாலையின் அதிபர் யோகதயாளன் அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக ளு.ஓ அன்ரன் (யோக பயிற்சி) அவர்களும், கௌரவ விருந்தினராக வர்த்தகர் பரமேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இறுதியில் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ, மாணவியர்க்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.