கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண ரீதியாக பாடசாலை மாணவர்கள் இன்றுகாலை 8.00மணி தொடக்கம் 8.30 வரை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கேப்பாபுலவு மக்களின் காணிகளை அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று கோரி இன்று யாழ் புனித ஜேம்ஸ் மகளிர் பாடசாலை மாணவிகளும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கேப்பாபுலவு மக்களுக்கு எமது ஆதரவு, மக்களின் நிலம் மக்களுக்கே என்னும் கருப்பொருளில் இந்த கவனயீர்ப்பில் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை இன்றையதினம் மாணவர்கள் புதுக்குடியிருப்பில் இராணுவமுகாமிற்கு முன்னாலும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். கேப்பாபுலவில் இன்றோடு 21 நாட்களாக இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது.