Header image alt text

IMG_2637வவுனியா கோவில்குளத்தைச் சேர்ந்த திரு கி.சங்கர் அவர்கள் தொகுத்து எழுதிய “வெற்றிக்கு வழிகாட்டி” எனும் பொது அறிவு சார்ந்த நூல் வெளியீட்டு விழா வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் கல்லூரி முதல்வர் திரு ரி.பூலோகசிங்கம் அவர்களின் தலைமையில் 17.02.2017 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

நூல் வெளியீட்டு விழாவின் பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு அதிதிகளாக கோவிக்குளம் இந்துக் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் கலாபூசணம் க.சிவஞானம் அவர்களுடன் ஓய்வுபெற்ற அதிபர் திரு சி.வையாபுரிநாதன் அவர்களும் கலந்துகொண்டார்கள். நிகழ்வில் கௌரவ அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.
Read more

amnesty internationalaஇலங்கையில் உண்மை மற்றும் நீதி பொறிமுறைகளில் பங்குகொண்டு உயிர் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்கின்றவர்களை தங்களது நாடுகளில் குடியேற்றிக்கொள்ள ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் இணங்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தல் விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் இலங்கையுடன் உடன்படிக்கைகளை செய்துகொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இலங்கையின் நீதி உண்மை மற்றும் நட்டஈட்டு பொறிமுறைகள் சர்வதேச தரத்தையும் மீளிடம்பெறாமையையும் உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை தொழிநுட்ப உதவிகளை வழங்க வேண்டும். Read more

aaaகேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் நேரில் சென்று அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி நேற்று 21ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்றுமாலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் குறித்த போராட்டக்களத்துக்கு விஜயம் செய்திருந்தனர். Read more

ssகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் போராட்டம் ஒன்றை இன்றுடன் இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காணாமற்போனோரின் பெயர் விபரங்களை வெளியிடுமாறும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலஅவகாசத்தை வழங்குவதற்கு இணங்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

vdகிளிநொச்சி வன்னேரிக்குளம் மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிப்பதில் 10 வருடங்களாக, அதிகாரிகள் இழுத்தடிப்புகளை மேற்கொண்டு வருவதாக, கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த மருத்துவமனையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றிய மருத்துவர் இடமாற்றம் பெற்றுச்சென்றதை அடுத்து, கடந்த 10 வருடங்களாக, நிரந்தர மருத்துவர் நியமிக்கப்படவில்லை. வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1000 குடும்பங்கள், தங்கள் மருத்துவ தேவைகளுக்கு அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்கே செல்ல வேண்டியுள்ளது. Read more

sfsயாழ். குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே பயணிகள் சேவையில் ஈடுபட்ட நெடுந்தாரகை இன்றுகாலை 10.30 மணியளவில் நெடுந்தீவில் தரைதட்டியுள்ளது.

இதனால் படகு சிறிது சரிந்துள்ளது.

ஆயினும் கடற்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பயணிகளை பத்திரமாக வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

fsமுல்லைத்தீவு மூங்கிலாறு தேக்கங்காட்டு பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் சிவில் அலுவலகம் ஒன்று அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தின் பின்னர் விசுவமடு உடையார்கட்டு புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் பொதுமக்கள் மீள்குடியேற்றப்பட்டபோது பொதுமக்களின் சிவில் சந்திப்புக்காக இந்த தேக்கங்காட்டு இராணுவ அலுவலகம் திறக்கப்பட்டது. எனினும் பொதுமக்கள் அந்த அலுவலகத்திற்குச் சென்று தமது தேவைகளை பெற்றுக் கொள்ளுதல் மிகக்குறைவாகவே காணப்பட்டதாக கூறப்படுகின்றது. Read more

americaஇருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவின் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நேற்றிரவு 16பேர் கொண்ட குறித்த குழுவினர் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

2016ம் ஆண்டு செப்டம்பர் 14ம் திகதி இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமையவே அவர்களின் இந்த விஜயம் அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இதேவேளை, இவர்கள் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர். Read more

ereமத்திய அரசும் மாகாண அரசும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கையெடுக்க கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சத்தியாக்கிரக போராட்டத்திற்கு முன்பாக தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கடும் வெயிலிலும் பச்சிளங்குழந்தைகளுடன் பட்டதாரி தாய்மாரும் கலந்துகொண்டதுடன் விசேட தேவையுடையவர்களும் கலந்துகொண்டனர். பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு தமக்கான நியமனங்கள் வழங்குவது காலம் தாழ்த்தப்படுவதாகவும், அவற்றை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர். Read more