கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோருடைய உறவுகளின் போராட்டம் ஒன்றை இன்றுடன் இரண்டாவது நாளாக தொடர்கின்றது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்னால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காணாமற்போனோரின் பெயர் விபரங்களை வெளியிடுமாறும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலஅவகாசத்தை வழங்குவதற்கு இணங்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.