americaஇருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்காவின் விஷேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நேற்றிரவு 16பேர் கொண்ட குறித்த குழுவினர் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

2016ம் ஆண்டு செப்டம்பர் 14ம் திகதி இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமையவே அவர்களின் இந்த விஜயம் அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இதேவேளை, இவர்கள் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவுள்ளனர். இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்பினரையும் குறித்த அமெரிக்க பிரதிநிதிகள் குழு சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.