sdfsdfdsssssமட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை பகுதியில் இரண்டு கைக் குண்டுகள் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. கிரான் கும்புறுமூலை மர முந்திரகை வீதியில் புதிதாக அமைக்கப்படும் உல்லாச விடுதிக்காக காணியை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டவேளை இரண்டு கைக் குண்டுகளை கண்டு வாழைச்சேனை பொலிஸாருக்கு உல்லாச விடுதியினர் அறிவித்துள்ளனர்.

இதன்பிரகாரம் வாழைச்சேனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு மட்டக்களப்பிலுள்ள குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர். குண்டு செயலிழக்கும் பிரிவினர் அங்கு சென்று அவற்றை செயழிலக்கும் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வாழைச்சேனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.