Header image alt text

dfgகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பரவிப்பாஞ்சான் மக்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது. அதன்போது, மக்களின் காணிகளை பிரதேச செயலாளர் அடையாளப்படுத்தியதன் பின்னர் தாம் வெளியேறுவதாக இராணுவத்தினர் உறுதியளித்திருந்தனர். Read more

bavanகௌரவ முதலமைச்சர்,
வடக்கு மாகாணசபை
கைதடி, யாழ்ப்பாணம்

20.02.2017
கனம் ஐயா,
தொடர்ச்சியாக வடமாகாணத்தின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றியும், அவற்றை நிவர்த்திசெய்யக் கூடிய நடைமுறைச் சாத்தியமான, யாழ் மாவட்டம் தவிர்ந்த, ஏனைய பின்தங்கிய மாவட்டங்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் பற்றியும், நாம் பல தடவைகள் பல நிர்வாக, அரசியல் தலைமை மட்டங்களிலும் வலியுறுத்தி வந்த போதிலும் அவை செவிடன் காதில் சங்கு ஊதுவது போலவே அமைகின்றது.

அண்மையில் வட மாகாண ஆசிரிய சேவையில் பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்காக நடாத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகள் பற்றி நிறையவே சந்தேகங்கள் பல மட்டத்திலும் ஏற்றபட்ட வண்ணமேயுள்ளது. Read more

SFDFDகாணாமற் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் ஈடுபட்டுள்ளனர். அரசியல்வாதிகளால் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பொய்யாகியுள்ள நிலையில் தாம் இனியும் ஏமாற தயாரில்லை என்று மூன்றம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமற் போனோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற வழிபாடுகளை அடுத்து நகர் வீதிவழியாக ஊர்வலமாக வருகை தந்து வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Read more

ssssஇந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடா தமது நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இந்தோனேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏ.எம்.பசீர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 6ம் 7ம் திகதிகளில் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர பிராந்திய ஒத்துழைப்பு ஒன்றிய மாநாட்டில் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார். அந்த மாநாடு நிறைவடைந்த பின்னர் இந்தோனேசியாவில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடு மாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read more

sfdஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனாவின் உயர்மட்டக் குழுவினர், அம்பாந்தோட்டை முதலீட்டு வலய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவரான, சொங் டாவோ தலைமையிலான குழுவினர் நேற்று கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். Read more

arrest (17)சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்துக்கு பயணிக்க இருந்த 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு, லெல்லாமா பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் தமிழர்கள் என கூறப்படுகிறது.

hospital (5)துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுப் பணிப்பாளர் என்.விமல்ராஜ் நேற்றுமாலை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

களுதாவளை கடற்கரை வீதியை அண்டி அமைந்துள்ள மேற்படி பணிப்பாளர் என்.விமல்ராஜ்ஜின் வீட்டுக்கு புதன்கிழமை (22) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர், அவர்மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர். Read more