hospital (5)துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மட்டக்களப்பு மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுப் பணிப்பாளர் என்.விமல்ராஜ் நேற்றுமாலை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

களுதாவளை கடற்கரை வீதியை அண்டி அமைந்துள்ள மேற்படி பணிப்பாளர் என்.விமல்ராஜ்ஜின் வீட்டுக்கு புதன்கிழமை (22) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர், அவர்மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர். இதன்போது படுகாயமடைந்த இவர், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,; பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளார்.