இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எட்டுப் பேர் கொண்ட அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், நேற்றையதினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட் தலைமையிலான எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வந்துள்ளனர்.
குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தலா நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவினர், நேற்றுக்காலை கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். Read more