மட்டக்களப்பு மாவட்ட வேலை இல்லா பட்டதாரிகள் தங்களுக்கு நியமனம் வழங்கக் கோரி தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே பாராளுமன்றத்தில் உரையாற்றி இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள், மீண்டும் தனிப்பட்ட ரீதியாக ஜனாதிபதி, பிரதமருக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், 31.03.2012ற்கு பிறகு உள்ள கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் 31.03.2012ற்கு பின்னர் 4500 மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரி 1000 தொடக்கம் 1500 வேலையில்லாத பட்டதாரிகள் காணப்படுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சராசரியாக 1300க்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் காணப்படுகின்றனர். Read more