வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் கல்லூரியின் முதல்வர் உயர்திரு சு.அமிர்தலிங்கம் தலைமையில் வெகு சிறப்பாக உக்குளாங்குளம் சீர்திருத்த மைதானத்தில் 23.02.2017 அன்று நடைபெற்றது.
வவுனியாவில் தனக்கென மைதானத்தை கொண்டிராத நிலையிலும், விபுலாநந்தா கல்லூரியின் பழைய மாணவர்களின் அனுசரணையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகளை கல்லூரியின் ஆசிரிய சமூகம் ஒழுங்கமைத்து வெற்றிகரமாக நடாத்தியிருந்ததுடன், இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா தெற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திரு முத்து இராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. சிறப்பு அதிதிகளாக மிருக வைத்தியரும் பழைய மாணவனுமான சச்சிதானந்தன் கிஷாந்தன், சட்டத்தரணியும் பழைய மாணவியுமான ஆனந்தகோபாலபிள்ளை அருணியா, கோட்டக்கல்வி அதிகாரி நடராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். கௌரவ அதிதிகளாக கிராம சேவையாளரும் பழைய மாணவனுமான சாந்தகுமார் கம்ஜகன், சூரியன் எப்.எம் அறிவிப்பாளர் தமிழ்ச்செல்வன் கிரிதரன், தொழிலதிபர் வெள்ளையன் நெல்சன் பெர்னாண்டோ, உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஜூட் பரதமாறன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.