Header image alt text

Read more

viyalendran MPசிறுபான்மை இன அரசியல் தலைவர்கள் ஒருமித்த கருத்துடன் அரசாங்கத்துடன் பேசுவதால் மாத்திரமே நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுள்கொள்ள முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடி விநாயகர் வித்தியாலய வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமானால் தமிழ் மக்களின் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். ஒருமித்த கருத்தை கூறவேண்டும். Read more

sdfdssdssமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் ஏழாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், இன்றுகாலை சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

இதன்போது கறுப்புப் பட்டியணிந்து பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாளேந்திரன், ஞா.சிறிநேசன், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, இரா.துரைரெட்ணம், Read more

ss (2)கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் நான்கு வகுப்பறைகளைக் கொண்ட கிடுகினால் வேயப்பட்ட தற்காலிக கொட்டகை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

பிரதேச மக்கள் மற்றும் பொலிசார் இணைந்து பிரதேச சபையின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். இருப்பினும், மின்னிணைப்புக்களற்ற வகுப்பறைத் தொகுதி எப்படி எரிந்தது? என்று இன்னமும் அறியப்படவில்லை. எவ்வாறாயினும், கிளிநொச்சியில் ஒரு தீயணைக்கும் கருவி இல்லாமையினாலே கிளிநொச்சியில் தீ விபத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முடியவில்லை என கல்வியியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

UNஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடர் இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளதோடு, எதிர்வரும் 24ம் திகதி வரை இந்தக் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

இதில் இலங்கை குறித்த மனித உரிமைகள் ஆணையாளரின் விஷேட அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கென இலங்கைக்கு வருகைதந்திருந்த விஷேட பிரதிநிதிகளின் அறிக்கையும் மனித உரிமைகள் கவுன்சிலில் கலந்துரையாடப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளைய தினம் உரையாற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

sddயுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான 1035 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செலாளர் பிரிவுகளின் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற, 45 வீடுகளில் முதற்கட்டமாக கட்டிமுடிக்கப்பட்ட மூன்று வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 26 நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது. Read more

dsdsssகளுத்துறையில் வைத்து, சிறைச்சாலை பஸ்ஸின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிரிழந்த ஏழுபேரில், சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் அடங்குகின்றனர். அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த அதிகாரிகள் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

dgfgf (2)மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து யாழ். மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியில் இந்த கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. இன்றுகாலை 8.30மணி தொடக்கம் 10.30 மணிவரை முன்னெடுக்கப்பட்ட இந்த பேராட்டத்தில் மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

sssவிக்ஸ்காடு பகுதியில் குடியிருக்கும் மக்கள் தமது தொடர் போராட்டத்தினை 6ஆவது நாளான இன்றும் மேற்கொண்டு வருகின்றனர். இத் தொடர் போராட்டத்தினை சிறுவர்கள்,

முதியவர்கள் எனப் பலரும் இணைந்து இரவு பகலாக முன்னெடுத்து வருகின்றனர். இன்று வவுனியாவில் மழை பெய்துவரும் நிலையிலும் தமது போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

sdfssddssவவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 4ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

எங்களது கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை தாங்கள் வேண்டி நிற்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.