ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 34ஆவது கூட்­டத்­தொடர் இன்று திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்­நி­லையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் எட்டாம் திகதி புதிய ஆட்சி ஏற்­பட்­டதன் பின்னர் நடை­பெற்ற மனித உரி­மைகள் கூட்­டத்­தொ­டரில் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரி­மைகள், மனி­தா­பி­மான சட்ட மீறல்கள் குறித்து கலப்­பு­மு­றை­யி­லான விசா­ரணை செய்­யப்­பட்­ட­வேண்டும் என வலி­யு­றுத்தி அமெ­ரிக்கா பிரே­ரணை கொண்டு வந்­தி­ருந்­தது.

இத்­தீர்­மா­னத்­திற்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றி­யி­ருந்­த­தோடு புதிய அர­சியல் அமைப்பின் ஊடாக தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும் என்றும் அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற அடை­யாளம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­படும் எனவும் சர்­வ­தே­சத்­திற்கு வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தது.