யுத்த சூழல் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேற்றப்பட்டவர்களுக்காக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான 1035 வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செலாளர் பிரிவுகளின் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய, மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற, 45 வீடுகளில் முதற்கட்டமாக கட்டிமுடிக்கப்பட்ட மூன்று வீடுகளை கையளிக்கும் நிகழ்வு 26 நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றது. வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டிருந்தார்.