UNஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34வது கூட்டத் தொடர் இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளதோடு, எதிர்வரும் 24ம் திகதி வரை இந்தக் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

இதில் இலங்கை குறித்த மனித உரிமைகள் ஆணையாளரின் விஷேட அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதேவேளை, சிறுபான்மையினரின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கென இலங்கைக்கு வருகைதந்திருந்த விஷேட பிரதிநிதிகளின் அறிக்கையும் மனித உரிமைகள் கவுன்சிலில் கலந்துரையாடப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளைய தினம் உரையாற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.