தமிழ் மக்கள் பேரவையும் சமூக அமைப்புக்களும் இன்று யாழ். கோணடாவிலில் சந்தித்து கலந்துரையாடியுள்ளன. கேப்பாபிலவு மற்றும் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பாக நடைபெற்று வருகின்ற போராட்டங்கள் தொடர்பாகவும், இந்தப் போராட்டங்களை மேலும் வலுவாக்குவதற்கான நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்வதற்காக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவினருக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது எதிர்வரும் 04ம் திகதிக்குள் காணி விடுவிக்கப்படுமென்று ஜனாதிபதி உறுதியளித்ததையடுத்து விமானப்படையினர் நாளை காலை 11மணிக்கு கேப்பாபிலவு காணிகளை கையளிப்பதாக இன்று அரசாங்க அதிபரிடம் கூறியுள்ளனர்.
ஆயினும் 04ம் திகதிக்குள் காணி விடுவிக்கப்படாவிடில் அடுத்த புதன்கிழமை (08.03.2017) கேப்பாபிலவு மற்றும் விடுவிக்கப்படாத ஏனைய காணிகளை விடுவிக்கக்கோரி வடக்கு கிழக்கு எங்கும் முழுமையான கடையடைப்பும், மறுதினம் கேப்பாபிலவு உள்ளிட்ட விடுவிக்கப்படாத பகுதிகளை நோக்கிய வாகனப் பேரணியும் நடாத்துவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.