Header image alt text

sdfssddssவவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று 4ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

எங்களது கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை தாங்கள் வேண்டி நிற்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

sfd (2)புலிகளுடையது என சந்தேகிக்கப்படும் வெடிக்காத குண்டுகள் 76 மீட்கப்பட்டுள்ளதாக, நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் நெல்லியடி வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருக்கும் கிணற்றினை துப்பரவு செய்யும்போதே, இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு வீட்டு உரிமையாளர் தகவலளித்துள்ளார். இதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற நெல்லியடி பொலிஸார், குறித்த குண்டுகளை மீட்டுள்ளனர். 1988ம் ஆண்டிற்குப் பின்னர் இந்த கிணறு பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. Read more

sfdfமட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டில் நேற்றுமாலை 4 மணியளவில் இடம்பெற்ற கோடரி வெட்டில், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு முன்னாள் மேயரின் வீட்டில் நபரொருவர், வெட்டுக்காயங்களுடன் கிடப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற தாம், காயமடைந்த நபரை மீட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

viyalendran (2)மட்டக்களப்பு மாவட்ட வேலை இல்லா பட்டதாரிகள் தங்களுக்கு நியமனம் வழங்கக் கோரி தொடர்ச்சியாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே பாராளுமன்றத்தில் உரையாற்றி இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள், மீண்டும் தனிப்பட்ட ரீதியாக ஜனாதிபதி, பிரதமருக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில், 31.03.2012ற்கு பிறகு உள்ள கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் 31.03.2012ற்கு பின்னர் 4500 மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரி 1000 தொடக்கம் 1500 வேலையில்லாத பட்டதாரிகள் காணப்படுகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சராசரியாக 1300க்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் காணப்படுகின்றனர். Read more

IMG_2836வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் கல்லூரியின் முதல்வர் உயர்திரு சு.அமிர்தலிங்கம் தலைமையில் வெகு சிறப்பாக உக்குளாங்குளம் சீர்திருத்த மைதானத்தில் 23.02.2017 அன்று நடைபெற்றது.

வவுனியாவில் தனக்கென மைதானத்தை கொண்டிராத நிலையிலும், விபுலாநந்தா கல்லூரியின் பழைய மாணவர்களின் அனுசரணையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வுகளை கல்லூரியின் ஆசிரிய சமூகம் ஒழுங்கமைத்து வெற்றிகரமாக நடாத்தியிருந்ததுடன், இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா தெற்கு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திரு முத்து இராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. Read more

dfdfdfdதனது குரல் வளத்தால் ஒட்டுமொத்த தமிழினத்தையும் வசீகரித்து கொண்ட ஒர் உன்னத கலைஞன். புரட்சிகர பாடல்கள், இறைபாடல்கள் என்று பல்வேறு பாடல்களைப் பாடி ஈழத்தின் பிரபல பாடகர் என்ற பெருமையை பறைசாற்றிய கலைஞர். அவரது குரலில் வெளிவந்த பல புரட்சிகர பாடல்கள் ஈழத்தின் ஆலயங்களின் வரலாறுகளை எடுத்து கூறும் பாடல்கள் என்று பல பாடல்களை தந்த ஒர் உன்னத குரலுக்கு சொந்தக்காரரான சாந்தன். கடந்த மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்காக கவிஞர் மாணிக்கம் ஜெகனின் வரிகளிற்கு ஈழத்தின் மற்றுமொரு முன்னணி இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் கணீர் என்ற குரலுக்கு சொந்தக்காரன் S.G சாந்தனின் குரலில் வெளிவந்த பாடல் ஒன்றை இன்று நினைவு மீட்கின்றோம்.

இவை மட்டுமல்ல இந்த மண் எங்களின் சொந்தமண்….” புட்டுக்கு மண் சுமந்த பெருமானே….. என்று நிறைய பாடல்களை பாடி ஈழத்தமிழ் மக்கள் மனங்களில் என்றுமே தனக்கென ஒர் முத்திரையை பதித்த கலைஞன் இன்று எம்மைவிட்டு பிரிந்துவிட்டார். அவர் பிரிந்தாலும் அவர் விதைத்துச் சென்ற பாடல்கள் என்றும் உயிர்வாழும் என்பது நிதர்சனம். அன்னாரது இழப்பால் துவண்டுபோயுள்ள ஈழத்து கலைஞர்கள், உறவுகள், நண்பர்களுடன் நாமும் எம்துயரினை பகிர்ந்து கொள்கின்றோம்.  (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி -கனடா)

viyalendran MPகடந்த ஆட்சிக் காலத்தில் பயிற்சி அடிப்படையில் அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்ட முறையினை இன்றைய ஆட்சியாளர்களும் கைக்கொண்டு, பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்க முன்வர வேண்டும் என, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீதிகளில் உண்டு உறங்கி தமது நியாயமான கோரிக்கையினை விடுத்துவரும் வேலையற்ற பட்டதாரிகளின் நிலைமைகள் தொடர்பில் உடனடியாக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோன்று களுதாவளையில் சுடப்பட்டு படுகாயமடைந்த விமல்ராஜ் மீதான தாக்குதல் தொடர்பில் உரிய முறையில் விசாரணைகள் செய்யப்பட்டு உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன் இந்த கோரிக்கைகளை விடுத்துள்ளார். Read more

maithriபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தாம் அறிவித்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நேற்று புதிய நீதிமன்றத் தொகுதியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய பின்னர், உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் உள்ளடக்க முடியாது என்ற தகவலை ஐ.நா பொதுச்செயலர் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மற்றும் சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தெரிவித்து விட்டேன். Read more

sdgfsவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையைச் சேர்ந்த மக்களே இணைந்துள்ளனர்.

மேலும், காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி அத்துடன் முஸ்ஸிம் மற்றும் சிங்கள மக்கள் இப்போராட்டத்தில் இணைந்து தமது ஆதரவினையும் தெரிவித்துள்ளனர். வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் கடந்த 24ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்கிறது.

dfsdகேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடக்கோரியும் யாழ். உரும்பிராயில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது உரும்பிராய் பலாலி வீதியில், இன்று காலை உரும்பிராய் பங்கு திருச்சபை மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் “அரசே பூர்வீக நிலத்தில் குடியேறி எம்மை வாழ விடு, எங்கள் கோரிக்கைகளுக்கு முடிவே வராதா?, இன்னும் எத்தனை காலம் தான் நாங்கள் அகதியாக வாழ்வது!, நல்லாட்சி அரசில் நல்லதைச் செய்யுங்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் முடிவு என்ன? போன்ற வாசகங்கள் இருந்த பதாதைகளை தாங்கி இருந்தனர். Read more