கேப்பாபுலவில் அமைந்துள்ள 279 ஏக்கர் காணிகள், எதிர்வரும் மே 15ஆம் திகதி விடுவிக்கப்படுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே, கேப்பாபுலவில் உள்ள 279 ஏக்கர் காணியை, மே 15ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக, பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது. Read more