இந்த ஆண்டு இறுதியில் இடம்பெற உள்ள தேர்தல்களுக்காக சிறீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இடம்பெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தின் போது இது தொடர்பாக பேசப்பட்டதாக அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி தூய்மையான அரசியல் இயக்கம் என்ற வகையில் சிறீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக அடுத்த தேர்தல்களில் களமிறங்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.