மட்டக்களப்பில் 12ஆவது நாளாக தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமானது தற்போது மனித சங்கிலி போராட்டமாக மாறியுள்ளது. இன்றயதினம் இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தினர் தங்களது ஆதரவை தெரிவித்ததை அடுத்து இந்த மனித சங்கிலி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் அரசாங்க அதிபரை சந்திக்க சென்றபோது பட்டதாரிகள் ஏமாற்றமடைந்ததையடுத்து சில அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து பட்டதாரிகளின் இந்த போராட்டத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர்.