வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று 11ஆம் நாளாக இடம்பெற்று வருவதுடன் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் அதனுடன் இணைந்ததாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்று காலை இலுப்பையடி பகுதியில் ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் இரண்டாம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய இரண்டாம்கட்ட தபால் அனுப்பும் போராட்டத்தில் பெருமளவிலான மக்கள் இணைந்து கொண்டு தங்களது தபால்களை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதற்காகச் சென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.