முல்லைத்தீவு – கேப்பாபிலவு இராணுவ முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
மக்களின் போராட்டக் களத்திற்கு இன்று நேரில் சென்ற குறித்த அமைப்பின் பிரதிநிதிகள், மக்களோடு இணைந்து இராணுவ முகாம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.