தென்பகுதி மீனவர்களால் வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியபோதும் தற்போதுவரையில் பதில்லை.
அவ்வாறான நிலையில் ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் அலுவலகத்தை வடக்கில் அமைப்பதற்கு என்ன காரணம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை உற்பத்தி வரி(விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தில் கலந்துகெண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.