dfsddsதிருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களது தொன்மைகளை வெளிப்படுத்தும் இடங்கள், ஆலயங்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியமான அடையாளங்கள், கல்வெட்டுகள் என்பன சிதைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வருவதோடு தொல்பொருள் திணைக்களத்தின் பெயரால் அவை அபகரிக்கப்படுவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனங்கள் அதிகரிப்பதோடு தேசிய நல்லிணக்கம் ஏற்படுவதில் இடைவெளிகளே எனவும் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டில் விசேட கேள்வியைத் தொடுத்தபோதே பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.